Sunday, January 22, 2006

யார் குற்றம்?

ஓர் அலுவலகத்தில் நான்கு பேர் இருந்தனர்.

அவர்கள் பெயர்கள் முறையே
1). யாராகிலும் 2). சிலபேர்3).ஒவ்வொருவரும் 4). எவருமே.

ஒரு முக்கியமான வேலை செய்ய வேண்டியதிருந்தது.
'யாராகிலும்' செய்வார் என்று 'ஒவ்வொருவரும்' நினைத்தார்.
'எவருமே' செய்யாமல் இருக்கக்கூடும் என்று 'யாராகிலும்' நினைக்கவில்லை.

கடைசியில் அந்த வேலை செய்யப்படாமலே போக
'ஒவ்வொருவரும்' 'சிலபேரை' குறை சொல்ல உண்மையில் குறைசொல்லப்படவேண்டியவர் 'எவருமே' இல்லை.

நீங்கள் சொல்லுங்கள் யாரைக் குற்றம் சொல்வது?

ஒரு சிறிய கணித வித்தை:

ஓர் ஏழு இலக்க எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள் (உங்கள் தொலை பேசி எண்ணாகக் கூட இருக்கலாம், மனக் கணக்கில் நீங்கள் புலி என்றால் கால்குலேட்டர் தேவையில்லை)

1. முதல் மூன்று எண்களை 80 ஆல் பெருக்குங்கள்
2. விடையுடன் 1 ஐக் கூட்டுங்கள்
3. பிறகு வரும் எண்ணை 250 ஆல் பெருக்குங்கள்
4. தற்போதுள்ள விடையுடன் இறுதி நான்கு எண்களை இருமுறைக் கூட்டுங்கள்
5. வரும் விடையிலிருந்து 250 ஐக் கழியுங்கள்
6. தற்போது இருக்கும் எண்ணை 2 ஆல் வகுங்கள்

தற்போது கிடைத்திருக்கும் எண் என்னவெனத் தெரிகிறதா?

6 Comments:

Blogger SnackDragon said...

கேள்வி 1 -க்கு பதில் : எல்லோருமே ? அல்லது நால்வருமே?

January 26, 2006 12:44 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

1245789
வைத்துப் பார்த்தேன்..

1240250 வந்தது...

January 26, 2006 12:52 PM  
Blogger புகழேந்தி said...

வாங்க கார்த்திக் நால்வருமே குற்றம் புரிந்தவர்கள் தான், பஞ்ச காலத்துப் பால்-தண்ணி கதை தெரியுமில்லையா?

January 29, 2006 10:19 AM  
Blogger புகழேந்தி said...

வாங்க சிறில்

நான் ஒரு 8 நம்பரை முயற்சி செஞ்சுட்டுதான் பதிவைப் போட்டேன்.. செக் பண்ணுறேன்.

January 29, 2006 10:20 AM  
Blogger ஷைலஜா said...

தமிழ்ல நீங்க எழுதிவிட்ட யார்குற்றத்தை இப்போதான் படிக்க நேர்ந்தது...நான் இது தெரியாமல் ஆங்கிலத்தில் என் வலையில் அளித்துவிட்டேன் மன்னிக்க.
ஷைலஜா

January 07, 2008 2:48 AM  
Blogger புகழேந்தி said...

சிறில்,

நீங்கள் சொன்ன 1245789-ஐயும் முயன்று பார்த்தேன் சரியாகவே வந்தது..:)

ஷைலஜா,

உங்கள் பின்னூட்டம் தாமதமாக அனுமதிக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்.

February 19, 2008 4:47 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4