தமிழ்மண நிர்வாகிகளின் புதிய அறிவிப்பு
தமிழ்மண நிர்வாகியிடமிருந்து வந்த புதிய மடலில் மட்டுறுத்தலை ஏதுவாக்கினால் மட்டுமே பட்டியலில் தொடர இயலும் என்று ஓர் 'அன்பான' மடல் ஒன்று வந்திருந்தது. எனது முந்தைய பதிவிலே கூட ஒரு விசிட்டர் தரம் தாழ்ந்த பின்னூட்டம் ஒன்றை அளித்திருந்தார். அவருக்கு பதிலையும் இட்டிருந்தேன். வலைப்பதிவில் இடுகைகள் இடுவதில் புதியவனாயிருப்பினும் நிகழ்வுகளைக் கவனித்தேதான் வந்திருக்கிறேன். சரி இப்போது ஒரு சிறு அலசல் செய்வோமா? முதலில் இவ்வகைத் தாக்குதலுக்கு உள்ளானவர் பலர், அவரவர் கருத்துக்கு உட்படாதோர் தரப்பிலிருந்து இது சிறுபிள்ளைத் தனமான தாகுதலாக முதலில் தோன்றியது. பின்னர் ஒரு குறிப்பிட்ட பதிவரை மட்டும் குறி வைத்து இவ்வகைப் போலிப் பின்னூட்டத் தாக்குதல்கள் தொடர்ந்தன. அவரும் ஏதோ ஒரு fetish-க்காக இதனைக் குறை சொல்வது போல எதிராகப் பின்னூட்டமிடும் நபரை சீண்டுவது போல பல்வகை முயற்சிகளும் மேற்கொண்டார். சரி, இதில் தமிழ்மண நிர்வாகிகள் என்ன குற்றமிழைத்தார்கள்? அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டிய அவசியம் எதிராகப் பின்னூட்ட மேற்படி போலி நபருக்கு அவசியம் இல்லை என்று தான் இத் தாக்குதலின் மூல காரணத்தை அறிந்தவர் எண்ணுவர். காசி என்கிறத் தனி நபரை மட்டும் குறி வைக்காது தமிழ்மண நிர்வாகி குழுவையே குறி வைத்து தூஷணங்கள் இடுவதைப் பார்த்தால், நிர்வாகக் குழுவை மட்டுறுத்தலைக் கட்டாயப் படுத்தும் மடல் அனுப்பும் நிலைக்குத் தள்ளப் பட இவ்வகை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டனவோ என ஐயம் எழுவதையும் தடுக்க முடியவில்லை. என் பதிவிற்கு இவ்வகை மட்டுறுத்தலை நான் என்று தூஷணப் பின்னூட்டம் பார்த்தேனோ அன்றே ஏற்படுத்திவிட்டேன். எது எப்படியோ போலிப் பின்னூட்டமிடும் நபர் யாராயினும், (யாரரென்று தெரியும் எனப் பலரும் சொல்கிறார்கள்) அவர் இம்மாதிரி முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
10 Comments:
யோவ், இந்தப் பிரச்சினைய விட்டுட்டு வேற ஏதாவது இருந்தாப் பேசுங்கய்யா..
சும்மா வழவழன்னுட்டு..
அண்மையில் என்னுடைய பதிவு ஒன்றிலும் ஒரு வேண்டத்தகா பின்னூட்டல் ஒன்று வந்தது.அதன்பின்னர்தான் நான் இந்த மறுமொழி மட்டுறுத்தும் வசதியை ஏற்படுத்திக்கொண்டேன். தங்களின் ஊகம் ஒருவேளை சரியாக இருந்தால் கூட அதை நடைமுறைப்படுத்தினால் ஒரு நட்டமும் ஏற்படுத்தபோவதில்லை என்பதே எனது கருத்து.
//தமிழ்மண நிர்வாகி குழுவையே குறி வைத்து தூஷணங்கள் இடுவதைப் பார்த்தால், நிர்வாகக் குழுவை மட்டுறுத்தலைக் கட்டாயப் படுத்தும் மடல் அனுப்பும் நிலைக்குத் தள்ளப் பட இவ்வகை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டனவோ என ஐயம் எழுவதையும் தடுக்க முடியவில்லை.//
எனக்கும் அப்டித்தான் தோணுது.. ஒண்ணுமே புரியல போங்க
தூசணப் பின்னூட்டங்களுக்கு முக்கிய காரணம் மனநிலை பாதிப்பு என்பது என் கனிப்பு.
ஒரு குறிப்பிட்ட வலைஞரை (இளைஞரை அல்ல ;-)))) குறிவைத்து செய்வதற்கு சம்பந்தப்பட்ட வலைஞரும் தன் கருத்தையும் அதன் தாக்கத்தையும் மறு பரிசீலனை செய்தால் இத்தகைய தூசனங்கள் குறையலாம் என்று நினைக்கிறேன்.
இயலாமையின் வெளிப்பாடு = தூசனப் பின்னூட்டங்கள்!
//யோவ், இந்தப் பிரச்சினைய விட்டுட்டு வேற ஏதாவது இருந்தாப் பேசுங்கய்யா..
சும்மா வழவழன்னுட்டு..//
enakkum ithu sari nu thooNuthungga.
வாங்க அனானி
உங்க கருத்த நீங்க சொல்லிட்டீங்க எனக்குத் தோணினத நான் சொல்லிட்டேன்.
வாங்க தர்சன்,
மட்டுறுத்துவதால் தூஷணப் பின்னூட்டத்தை சுவடு தெரியாமல் அழிக்க முடிகிறது..
வாங்க அட்றா சக்கை,
வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றி
வாங்க நல்லடியார்,
இந்த இறுக்க நிலை மாறணும்கிறது தான் என்னோட ஆசையும். இயலாமை தான் காழ்ப்பா மாறுதுன்னு நீங்க சொல்றது 100க்கு 100 சரி
வாங்க மணிகண்டன்,
வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி. இப்போது கூட ஒரு தரமிழந்த பின்னூட்டத்த மறுக்க வேண்டியதாப் போச்சு..
Post a Comment
<< Home