Sunday, April 08, 2007

Plan - B!!!

சிக்கன் லிட்டில் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் இறுதிக்காட்சியின் போது Plan - B, Plan -C, Plan - D என்றெல்லாம் சிக்கன் லிட்டில் சொல்லும்.

இந்த இடுகை அதைப்பற்றியது இல்லை. ஒரு ஊரில் மனிதக்குரங்கு ஒன்று விலங்கியல் தோட்டத்தில் இருந்து தப்பிவிட்டதாம். அது மிகவும் அபாயகரமான விலங்கு என்பதால் அதனைப் பிடிக்க நகர நிர்வாகத்துடன் இணைந்து விலங்கியல் தோட்ட நிர்வாகமும் ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் மூலமும், வானொலி மூலமும் பொது அறிவிப்புகள் மூலம் தேடுதலை முடுக்கிவிட்டதாம்.

ஒருவழியாக விலங்கியல் தோட்ட நிர்வாகத்திற்கு நகரத்தின் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டின் கூரையில் தப்பித்த அந்த மனிதக்குரங்கு நின்று அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருப்பதாகத் தகவல் கிடைத்ததாம். வீட்டு உரிமையாளரை அமைதியாக இருக்கச் சொன்ன நிர்வாகம், உடனடியாக மனிதக்குரங்குகள் பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஒருவரை அந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

அக்குறிப்பிட்ட வீட்டின் முன் சற்றே முதியவரான மனிதக்குரங்கு பிடிப்பவரது வாகனம் வந்து நின்றது. அந்த வாகனத்தில் தப்பிய மனிதக்குரங்கை அடைத்து வைக்க வல்ல ஒரு கூண்டு இருந்தது. அவர் கையோடு வாகனத்தில் கொண்டுவந்தவை:
- கெட்டியான தாம்புக் கயிறு
- ஒரு வேட்டை நாய்
- மடங்கிவிரியும் ஏணி ஒன்று
- கைவிலங்கு (a pair of Handcuffs)
- பந்தடிக்கும் ஒரு மட்டை
- ஒரு வேட்டைத்துப்பாக்கி

வீட்டின் உரிமையாளர் ஆர்வ மிகுதியால் இந்தப் பட்டியலில் இருக்கும் கொண்டுவந்த ஒவ்வொரு பொருளுக்கும் உபயோகம் என்ன எனக் கேட்டார். மனிதக்குரங்கு பிடிப்பவர், "முதலில் ஏணியின் மூலம் மேலேறி அங்கு நிற்கும் மனிதக்குரங்கின் மண்டையில் பந்தடிக்கும் மட்டையால் ஒரு போடு போடுவேன்; நிலை தடுமாறி கூரையிலிருந்து மனிதக்குரங்கு தரையில் விழும்; கீழே தயாராகக் காத்திருக்கும் வேட்டை நாய் மனிதக்குரங்கின் பிறப்புறுப்பைத் தாக்கும். அதனால் தன் இருகைகளையும் தொடைகளுக்கு நடுவே மனிதக்குரங்கு கொண்டு வரும் போது நான் கைவிலங்கைப் பூட்டி அதனைக் கூண்டில் அடைத்து விலங்கியல் தோட்டத்திற்கு அழைத்துச் செல்வேன்" எனக்கூறினார்.

வாய்பிளந்து இந்த செய்முறையைக் கேட்டுக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர், "ஒரு விஷயம் புரியலையே" என்றார்.

" என்ன அது ?" என்றார் ம.கு. பிடிப்பவர்.

"எல்லாத்துக்கும் உபயோகம் சொன்னீங்க, அந்த வேட்டைத் துப்பாக்கி எதுக்கு?"

"ஓ அதுவா? அது Plan - B"

"புரியலையே!"

" வேறு ஒண்ணும் இல்லை ஒருவேளை மனிதக்குரங்கு மட்டையைப் பிடுங்கி என்னை ஒரு போடு போட்டு கீழே வீழ்த்திவிட்டால், பாய்ந்து வரும் வேட்டைநாயைச் சுட்டுத் தள்ள!"

6 Comments:

Blogger முஸ்லிம் said...

ஹா... ஹா... ஹா

ஒரே சிரிப்புத்தான் போங்க!

April 08, 2007 8:17 AM  
Blogger புகழேந்தி said...

அனானி

வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் நன்றிங்க!! அப்படியே ஒரு நாலு வாஅர்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்..

முஸ்லிம்,

வாய்விட்டுச் சிரிச்சா ஒடம்புக்கு நல்லதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க.

அடிக்கடி வாங்க!

April 08, 2007 9:39 PM  
Anonymous Anonymous said...

நல்லதொரு மொக்கை காமெடி...!!!

வேறு சில ஜோக்குகளை எடுத்து விடுங்க...

April 08, 2007 10:14 PM  
Blogger உண்மைத்தமிழன் said...

அட்டகாசம் போங்க.. வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.. வெல்டன் புகழேந்தி.. இது மாதிரி நிறைய எடுத்துப் போடுங்க.. ஏன்னா இடஒதுக்கீடு, பார்ப்பான், பார்ப்பாணியம், பறையன், தலித், சக்கிலியன், பந்த், பெரியார்ன்னு இங்க ஒரே மண்டையடியா இருக்கு.. யாராச்சும் கொஞ்சம் சிரிக்க வைங்கப்பா..

April 09, 2007 12:09 AM  
Blogger சென்ஷி said...

செம காமெடிப்பா :))

சென்ஷி

April 09, 2007 5:41 AM  
Blogger புகழேந்தி said...

செந்தழல் ரவி,

வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி! ஆமா இந்த மொக்கை அப்படின்னா என்ன?

உண்மைத்தமிழன்,

நன்றி, கைவசம் இருக்குறதா ஒண்ணொன்னா ரிலீஸ் செய்வோம். எனக்கும் நீங்க சொன்ன இட ஒதுக்கீடு etc குறித்த பார்வை/ கருத்து எல்லாம் இருக்கு. ஆனா எழுதுறதா இப்போதக்கு உத்தேசம் இல்லை

சென்ஷி,

நன்றி!!

April 09, 2007 11:37 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4