Sunday, November 05, 2006

இப்படியும் ஓர் ஊர் உள்ளதா?

எனக்கு இ-மெயிலில் வந்த ஒரு மடலிது. உண்மையில் இப்படிப் பெயர் உடைய ஊர் ஜெர்மனியில் உள்ளதா எனத் தெரியவில்லை. அல்லது தமிழகத்தைச் சேர்ந்த சிலுக்குவார்பட்டி, கிணத்துக்கடவு, செங்கோட்டையன் போன்ற பெயர்கள் தூர்தர்ஷனின் செய்தி வாசிப்பாளர்கள் வாயில் படாத பாடு படுவதைப் போல ஜெர்மன் பெயர்களுக்கு எதிராக ஆங்கிலம் உச்சரிப்போர் செய்த சதியா இது?

ஜெர்மனியில் இருந்து வலைப்பதியும் அன்பர்கள் யாரேனும் இதை உறுதி செய்யலாம்.

எதுவாக இருந்தாலும் சரி, இந்த மடலைப் பார்த்து நான் சிரித்ததை அருகிலுள்ளவர்கள் இவனுக்கு என்ன ஆயிற்று என்று 'ஒரு மாதிரியாகப்' பார்த்தனர். எனவே ஓர் எச்சரிக்கை: அருகில் எவரும் இல்லாத போது மேற்கொண்டு படிக்கவும். இனி......

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4