பார்பிக்கு 50 வயசாம்ல!
பார்பிங்கற ஒரு பொம்மைய வச்சி நல்லா காசு பாக்கிறாய்ங்கப்பா இந்த மேட்டல் கம்பெனிக் காரனுங்க! என்னமோ பெண்விடுதலையின் சின்னமாம் இது ஒரு சில கேணப்பயலுங்க சொல்றாய்ங்க!
சரி 50 வயசானா ஓல்டு லுக்குல்லாம் வராதா? தெரியாமத் தான் கேக்குறேன்.
நெசமாவோ பார்பி ஒரு உயிரோட இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?
1. கடுமையான முதுகுவலியால் அவதிப்படுமாம். (இத்தினி வருசமா ஹைஹீல்ஸ் மாட்டிகினி அலைஞ்சா)
2. எலும்புல்லாம் தேய்ன்சி போகும் ஆச்டியோபோராசிஸ் -னால அவதிப்படுமாம்.
3. கண்ணாடி மாட்டிக்க வேண்டி வந்திருக்குமாம். (சரியா ஊட்டச்சத்துல்லாம் சாப்பிடல்லைல)
4. நரைமுடி... ஹிஹி.. வந்திருக்குமாம்.
5. நட்டம நிக்க ரொம்பக் கஷ்டப்படுமாம். (ஏன்னு கேக்குறீங்களா.. படத்தில கடேசி வரியைப் படிங்க)
ரொம்ப நாளக்கி அப்புறமா ஸ்டார்ட் ஒரு மொக்கையோட இருக்க வேணாமா.. அதான்!
1 Comments:
வாங்கண்ணே!
நல்லாஇருக்கியளா..
Post a Comment
<< Home