Tuesday, May 05, 2009

தமிழக முதல்வர் டாக்டர் ஜெயலலிதா!

கொஞ்ச நாள் ரிசஷன் அப்டிங்கறதால மொக்கை எதுவும் சரியா சிக்கலை. சும்மா காலாட்டிக்கிட்டு இருக்குறதுக்குப் பதிலா எங்க ஊரு பேர கூகிள் தேடுபொட்டியில் போட்டுத் தேடிப் பாத்தா...

எங்க ஊரு மாநாகராட்சிக்கு வெப்சைட் இருக்குன்னு தெரிஞ்சு ஆச்சரியமாப் போச்சு! அட இனி எல்லாமே ஆன்லைன் இ-கவர்மெண்டு தானான்னு வாயப் பொளந்து போனேன்!

அதுல ஒரு லிங்க் மாட்டுச்சு! படார்னு ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சிக்கிட்டேன். ஆமா எங்கூரு காராய்ங்களப் பத்தி தெரியாதா?

அது போன வருசம்னு ப்ளேட்டை மாத்திரிவாய்ங்க..






படத்தில தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்-னு போட்டிருக்கு பாத்தியளா..

வேணும்னா நீங்களே கிளிக்கிப் பாருங்க..


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஆகி இந்தா இன்னும் ஒரு ஒருவருச வாக்கில அடுத்த தேர்தலே வரப்போவுது.. இன்னும் தமிழக முதல்வர் மாறுனது தெரியாம படத்தைப் போட்டு ஹாயா காலாட்டிக்கிட்டு இருக்காய்ங்க..

மதுரை மாநகராட்சி மேயரும் அண்ணன் அஞ்சாநெஞ்சரின் ஆசி பெற்றவர் தான்.

இந்தப் படத்தப் பாத்து இன்னும் கொஞ்சம் ஆசி கிடைக்கட்டும்..!

என்ன நாஞ்சொல்றது?

Labels: , ,

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4