Tuesday, May 05, 2009

தமிழக முதல்வர் டாக்டர் ஜெயலலிதா!

கொஞ்ச நாள் ரிசஷன் அப்டிங்கறதால மொக்கை எதுவும் சரியா சிக்கலை. சும்மா காலாட்டிக்கிட்டு இருக்குறதுக்குப் பதிலா எங்க ஊரு பேர கூகிள் தேடுபொட்டியில் போட்டுத் தேடிப் பாத்தா...

எங்க ஊரு மாநாகராட்சிக்கு வெப்சைட் இருக்குன்னு தெரிஞ்சு ஆச்சரியமாப் போச்சு! அட இனி எல்லாமே ஆன்லைன் இ-கவர்மெண்டு தானான்னு வாயப் பொளந்து போனேன்!

அதுல ஒரு லிங்க் மாட்டுச்சு! படார்னு ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சிக்கிட்டேன். ஆமா எங்கூரு காராய்ங்களப் பத்தி தெரியாதா?

அது போன வருசம்னு ப்ளேட்டை மாத்திரிவாய்ங்க..






படத்தில தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்-னு போட்டிருக்கு பாத்தியளா..

வேணும்னா நீங்களே கிளிக்கிப் பாருங்க..


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஆகி இந்தா இன்னும் ஒரு ஒருவருச வாக்கில அடுத்த தேர்தலே வரப்போவுது.. இன்னும் தமிழக முதல்வர் மாறுனது தெரியாம படத்தைப் போட்டு ஹாயா காலாட்டிக்கிட்டு இருக்காய்ங்க..

மதுரை மாநகராட்சி மேயரும் அண்ணன் அஞ்சாநெஞ்சரின் ஆசி பெற்றவர் தான்.

இந்தப் படத்தப் பாத்து இன்னும் கொஞ்சம் ஆசி கிடைக்கட்டும்..!

என்ன நாஞ்சொல்றது?

Labels: , ,

Monday, March 09, 2009

பார்பிக்கு 50 வயசாம்ல!


பார்பிங்கற ஒரு பொம்மைய வச்சி நல்லா காசு பாக்கிறாய்ங்கப்பா இந்த மேட்டல் கம்பெனிக் காரனுங்க! என்னமோ பெண்விடுதலையின் சின்னமாம் இது ஒரு சில கேணப்பயலுங்க சொல்றாய்ங்க!




சரி 50 வயசானா ஓல்டு லுக்குல்லாம் வராதா? தெரியாமத் தான் கேக்குறேன்.




நெசமாவோ பார்பி ஒரு உயிரோட இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?




1. கடுமையான முதுகுவலியால் அவதிப்படுமாம். (இத்தினி வருசமா ஹைஹீல்ஸ் மாட்டிகினி அலைஞ்சா)


2. எலும்புல்லாம் தேய்ன்சி போகும் ஆச்டியோபோராசிஸ் -னால அவதிப்படுமாம்.


3. கண்ணாடி மாட்டிக்க வேண்டி வந்திருக்குமாம். (சரியா ஊட்டச்சத்துல்லாம் சாப்பிடல்லைல)


4. நரைமுடி... ஹிஹி.. வந்திருக்குமாம்.


5. நட்டம நிக்க ரொம்பக் கஷ்டப்படுமாம். (ஏன்னு கேக்குறீங்களா.. படத்தில கடேசி வரியைப் படிங்க)






ரொம்ப நாளக்கி அப்புறமா ஸ்டார்ட் ஒரு மொக்கையோட இருக்க வேணாமா.. அதான்!

Labels: , , ,

Sunday, April 08, 2007

Plan - B!!!

சிக்கன் லிட்டில் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் இறுதிக்காட்சியின் போது Plan - B, Plan -C, Plan - D என்றெல்லாம் சிக்கன் லிட்டில் சொல்லும்.

இந்த இடுகை அதைப்பற்றியது இல்லை. ஒரு ஊரில் மனிதக்குரங்கு ஒன்று விலங்கியல் தோட்டத்தில் இருந்து தப்பிவிட்டதாம். அது மிகவும் அபாயகரமான விலங்கு என்பதால் அதனைப் பிடிக்க நகர நிர்வாகத்துடன் இணைந்து விலங்கியல் தோட்ட நிர்வாகமும் ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் மூலமும், வானொலி மூலமும் பொது அறிவிப்புகள் மூலம் தேடுதலை முடுக்கிவிட்டதாம்.

ஒருவழியாக விலங்கியல் தோட்ட நிர்வாகத்திற்கு நகரத்தின் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டின் கூரையில் தப்பித்த அந்த மனிதக்குரங்கு நின்று அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருப்பதாகத் தகவல் கிடைத்ததாம். வீட்டு உரிமையாளரை அமைதியாக இருக்கச் சொன்ன நிர்வாகம், உடனடியாக மனிதக்குரங்குகள் பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஒருவரை அந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

அக்குறிப்பிட்ட வீட்டின் முன் சற்றே முதியவரான மனிதக்குரங்கு பிடிப்பவரது வாகனம் வந்து நின்றது. அந்த வாகனத்தில் தப்பிய மனிதக்குரங்கை அடைத்து வைக்க வல்ல ஒரு கூண்டு இருந்தது. அவர் கையோடு வாகனத்தில் கொண்டுவந்தவை:
- கெட்டியான தாம்புக் கயிறு
- ஒரு வேட்டை நாய்
- மடங்கிவிரியும் ஏணி ஒன்று
- கைவிலங்கு (a pair of Handcuffs)
- பந்தடிக்கும் ஒரு மட்டை
- ஒரு வேட்டைத்துப்பாக்கி

வீட்டின் உரிமையாளர் ஆர்வ மிகுதியால் இந்தப் பட்டியலில் இருக்கும் கொண்டுவந்த ஒவ்வொரு பொருளுக்கும் உபயோகம் என்ன எனக் கேட்டார். மனிதக்குரங்கு பிடிப்பவர், "முதலில் ஏணியின் மூலம் மேலேறி அங்கு நிற்கும் மனிதக்குரங்கின் மண்டையில் பந்தடிக்கும் மட்டையால் ஒரு போடு போடுவேன்; நிலை தடுமாறி கூரையிலிருந்து மனிதக்குரங்கு தரையில் விழும்; கீழே தயாராகக் காத்திருக்கும் வேட்டை நாய் மனிதக்குரங்கின் பிறப்புறுப்பைத் தாக்கும். அதனால் தன் இருகைகளையும் தொடைகளுக்கு நடுவே மனிதக்குரங்கு கொண்டு வரும் போது நான் கைவிலங்கைப் பூட்டி அதனைக் கூண்டில் அடைத்து விலங்கியல் தோட்டத்திற்கு அழைத்துச் செல்வேன்" எனக்கூறினார்.

வாய்பிளந்து இந்த செய்முறையைக் கேட்டுக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர், "ஒரு விஷயம் புரியலையே" என்றார்.

" என்ன அது ?" என்றார் ம.கு. பிடிப்பவர்.

"எல்லாத்துக்கும் உபயோகம் சொன்னீங்க, அந்த வேட்டைத் துப்பாக்கி எதுக்கு?"

"ஓ அதுவா? அது Plan - B"

"புரியலையே!"

" வேறு ஒண்ணும் இல்லை ஒருவேளை மனிதக்குரங்கு மட்டையைப் பிடுங்கி என்னை ஒரு போடு போட்டு கீழே வீழ்த்திவிட்டால், பாய்ந்து வரும் வேட்டைநாயைச் சுட்டுத் தள்ள!"

Wednesday, April 04, 2007

கமல் எங்கே பார்க்கிறார்?


கமல் சிறந்த நடிகர் / கலைஞர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால் அவரது பலவீனம் என்ன என்பதையும் பலர் அறியாமல் இல்லை. இது என்ன விருது வழங்கும் விழாவோ தெரியவில்லை, இது மடலில் வந்த ஒரு படம். அந்த மடலின் தலைப்பைத் தான் இந்த இடுகையின் தலைப்பாகக் கொடுத்திருக்கிறேன். இந்தக் கேள்விக்கு பதிலைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.... (இப்படித்தான் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி இருக்கிறது)

Sunday, November 05, 2006

இப்படியும் ஓர் ஊர் உள்ளதா?

எனக்கு இ-மெயிலில் வந்த ஒரு மடலிது. உண்மையில் இப்படிப் பெயர் உடைய ஊர் ஜெர்மனியில் உள்ளதா எனத் தெரியவில்லை. அல்லது தமிழகத்தைச் சேர்ந்த சிலுக்குவார்பட்டி, கிணத்துக்கடவு, செங்கோட்டையன் போன்ற பெயர்கள் தூர்தர்ஷனின் செய்தி வாசிப்பாளர்கள் வாயில் படாத பாடு படுவதைப் போல ஜெர்மன் பெயர்களுக்கு எதிராக ஆங்கிலம் உச்சரிப்போர் செய்த சதியா இது?

ஜெர்மனியில் இருந்து வலைப்பதியும் அன்பர்கள் யாரேனும் இதை உறுதி செய்யலாம்.

எதுவாக இருந்தாலும் சரி, இந்த மடலைப் பார்த்து நான் சிரித்ததை அருகிலுள்ளவர்கள் இவனுக்கு என்ன ஆயிற்று என்று 'ஒரு மாதிரியாகப்' பார்த்தனர். எனவே ஓர் எச்சரிக்கை: அருகில் எவரும் இல்லாத போது மேற்கொண்டு படிக்கவும். இனி......

Thursday, August 31, 2006

அலுவலக மொழி - சிறு கையேடு

பள்ளியில் படித்த காலத்தில் 'கையேடு' கல்லூரிகளில் படித்த போது 'Prospectus' என்று உடனுக்குடன் விதிமுறைகள், விளக்கங்கள் தெரிந்து கொள்வதற்காகக் கொடுத்திருப்பார்கள். (அதை எத்தனை முறை படித்திருப்போம் என்பது வேறு விஷயம்!)

அலுவலகங்களில் மின்மடல் மூலமும், காகிதம் மூலமும் எழுதப்படும் சிறு குறிப்புகளுக்கு உண்மையில் என்ன பொருள்? மொழிபெயர்த்தால் அவற்றின் சுவை குறைய வாய்ப்புள்ளதால் ஆங்கிலத்தில் அப்படியே......

1. For your information, please. (FYI)
பொருள்: I don't know what to do with this, so please keep it.

2. Noted and returned.
பொருள்: I can't figure out what to do with this, so please keep it little while.

3. Review and comment.
பொருள்: Do the dirty work so that I can forward it.

4. Action please.
பொருள்: Get yourself involved for me. Don’t worry, I'll claim the credit.

5. For your necessary action.
பொருள்: It's your headache now.

6. Copy to.
பொருள்: Here comes a share of my headache.

7. For your approval, please.
பொருள்: Put your neck on the chopping board for me please.

8. Action is being taken.
பொருள்: Your correspondence is lost and I am trying to locate it.

9. Your letter is receiving our attention.
பொருள்: I am trying to figure out what you want.

10. Please discuss.
பொருள்: I don't know what the "f ***" this is, so please brief me.

11. For your immediate action.
பொருள்: Do it NOW! Or I will get into serious trouble.

12. Please reply soon.
பொருள்: Please be efficient. It makes me look inefficient.

13. We are investigating/processing your request with the relevant authorities.
பொருள்: They are causing the delay, not us.

14. Regards.
பொருள்: Thanks and bless you for reading all the bull-s***t.

Tuesday, July 11, 2006

உலகின் மிகச்சிறிய Fairy Tale

இன்னொரு ரொம்பக் குட்டி போஸ்ட் போடுவதற்கு படிக்கிறவர்கள் மன்னிக்கணும்.

உலகின் மிகச்சிறிய Fairy tale

Once upon a time, a guy asked a girl "Will you marry me?"

The girl said, "NO!"

And the guy lived happily ever after and played soccer, playstation and golf a lot and drank beer and had shitloads of money and farted whenever he wanted.

THE END

டிஸ்கி: எந்த உள், வெளி, சைடு குத்தோ இல்லை. யாராவது மனம் புண்பட்டிருந்தால் மண்ணிச்சுக்கோங்க.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4